தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்தித்தேன் – மேகன்

158721808 1799997543515751 313857708086481458 o 300x169 1
158721808 1799997543515751 313857708086481458 o 300x169 1

ஹரிமேர்கன் தம்பதியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓப்பிரா வின்பிரேயின் பேட்டி வெளியாகியுள்ளது. ஹரிதம்பதியினர் அரசகுடும்பத்தில் தங்கள் வாழ்க்கை குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். முதலில் மேகனே ஓப்பிராவுடன் உரையாடினார் பின்னர் ஹரி இணைந்துகொண்டார்

ஹரிமேகனின் குழந்தை எவ்வாறானதாக காணப்படும் என அரச குடும்பத்தில் பல கருத்து பரிமாற்றங்கள் காணப்பட்டன என்பதே பேட்டியில் வெளியாகியுள்ள முக்கிய குற்றச்சாட்டு.

நான் கர்ப்பிணியாகயிருந்த காலத்தில் எனது குழந்தை எவ்வளவு கறுப்பான தோலை கொண்டிருக்கும் என்பது குறித்தே கரிசனைகளும் சம்பாசனைகளும் காணப்பட்டன என மேகன் தெரிவித்துள்ளார். ஹரியுடன் இது குறித்து இடம்பெற்ற உரையாடல்களை அவர் எனக்கு தெரிவித்தார் என மேகன் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் யார் இவ்வாறான கருத்துகளை வெளியிட்டனர் என்பதை பகிர்ந்து கொள்ளப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர். அந்த உரையாடல் நான் ஒருபோதும் அதனை பகிர்ந்துகொள்ளப்போவதில்லை, அந்த நேரத்தில் அது மோசமானதாக காணப்பட்டது நான் அதிர்ச்சியடைந்தேன் என ஹரி குறிப்பிட்டுள்ளார்

அரசகுடும்பத்தில் இணைந்துகொண்ட பின்னர் தான் எவ்வளவு தனிமையாக உணர்ந்தேன் தனது சுதந்திரத்தை இழந்தேன் என மோர்கன் குறிப்பிட்டுள்ளார். நான் அந்த குடும்பத்தில் இணைந்த பின்னர் நான் கடைசி தடவையாக எனது கடவுசீட்டு எனது வாகனசாரதி அனுமதிப்பத்திரம் எனது சாவி ஆகியவற்றை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எனது மனோநிலை மிகமோசமாக பாதிக்கப்பட்டது நான் உயிர்வாழவே விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நான் சில நிறுவனங்களிற்கு சென்று உதவி பெறுவதற்காக நான் எங்காவது செல்லவேண்டும் என தெரிவித்தேன்,முன்னர் ஒருபோதும் இல்லாத நிலையை உணர்கின்றேன் எனக்கு உதவி தேவை என குறிப்பிட்டேன் என மேர்கன் தெரிவித்துள்ளார். ஆனால் நான் அவ்வாறு செல்ல முடியாது என தெரிவித்தார்கள்,என அவர் தெரிவித்துள்ளார்.

நான் மிகவும் சிரேஸ்ட அதிகாரியொருவரை சந்தித்தேன் அரண்மனையின் மனிதவள பிரிவிற்கு சென்றேன் ஆனால் எதுவும் நடக்கவில்லைஎன அவர் குறிப்பிட்டுள்ளார். டயானாவின் நண்பர்களில் ஒருவருடன் பேசினேன். பேட்டியின் போது பல தடவை இளவரசி டயனா குறித்து தெரிவிக்கப்பட்டது. அரசகுடும்பத்தில் தாங்கள் அனுபவித்த விடயங்களிற்கும் டயனா அனுபவித்த விடயங்களிற்கும் இடையிலான ஒற்றுமைகளை ஹரி தம்பதியினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

கடும் மன உளைச்சலிற்கு ஆளாகியிருந்த வேளை யாரிடம் செல்வது என தெரியாத நிலையிலிருந்தேன் என குறிப்பிட்டுள்ள மேகன் எனது கணவரின் தாயரின் சிறந்த நண்பராக விளங்கிய – தற்போதும் எங்களின் நல்ல நண்பராக அனுதாபியாக காணப்படுகின்ற ஒருவரை நாடினேன் என குறிப்பிட்டுள்ளார். அரண்மணைக்குள்ளே என்ன இருக்கின்றது என்பதை யாரால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியும் என மேர்கன் கேள்வி எழுப்பியுள்ளார். சார்ல்ஸ் தன்னை கைவிட்டுவிட்டார் என்பது போல ஹரி உணர்ந்தார்.

ஓப்பிரா ஹரியிடம் உங்கள் குடும்பத்தவர்களுடனான உங்கள் உறவு எவ்வாறு காணப்பட்டது குறிப்பா உங்கள் தந்தை சகோதரருடன் உங்கள் உறவு எவ்வாறு காணப்பட்டது என கேள்வி எழுப்பினார்? அரண்மனையின் சிரேஸ்ட உறுப்பினர் என்ற பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் தனது தந்தை தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டார் என ஹரி தெரிவித்துள்ளார். நான் கைவிடப்பட்டதாக உணர்ந்தேன் ஏனென்றால் அவரும் அந்த நிலையிலிருந்தவர் அவருக்கு அந்த வலி எவ்வாறானதாகயிருக்கும் என்பது தெரிந்திருக்கும் என ஹரி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நான் அவரை தொடர்ந்தும் நேசிப்பேன் நிறையகாயப்படுத்தல்கள் இடம்பெற்றுள்ளன இந்த உறவை குணப்படுத்துவதை எனது முன்னுரிமைக்குரிய விடயமாக கருதுவேன் என ஹரி தெரிவித்துள்ளார்