அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.02 கோடியைத் கடந்தது!

depositphotos 343962690 stock photo illustration corona virus microbe infection
depositphotos 343962690 stock photo illustration corona virus microbe infection

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.50 இலட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.02 கோடியைத் தாண்டியுள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.24 கோடியைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.