ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்! பத்துப்பேர் பலி!

taliban attack
taliban attack

ஆப்கானிஸ்தானில் தலிபான்களினால் இன்று மீண்டும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர் என உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளில் சுமார் 54000 அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பயங்கரவாத செயல்களை கைவிடுவதாக தலிபான் அமைப்பு கூறியதையடுத்து இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆனாலும், இந்த பேச்சுவார்த்தைகளின் போது முடிவுகள் எதுவும் இதுவரையில் எட்டப்படவில்லை.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் துப்பாக்கி சூடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காபூல் நகரில் பல்வேறு முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள ஷாஷ் தரக் பகுதியில் இன்று சக்திவாய்ந்த வெடி குண்டு வெடித்துள்ளது.
இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன். பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 25 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதேவேளை, கடந்த 2ஆம் திகதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் கிரீன் வில்லேஜ் பகுதியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 119 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.கடந்த திங்கட்கிழமை முதல் நடாத்தப்பட்ட இரண்டாவது பெரிய தலிபான் தாக்குதலுக்குப் பின்னர் காவல்துறையினர் அந்த பகுதியை மூடிவிட்டனர்.