அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 5369 ஆக உயர்வு!

1601906932 covid19 2 1 1
1601906932 covid19 2 1 1

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 இலட்சத்து 48 ஆயிரத்து 372 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 53 ஆயிரத்து 69 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 428 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 இலட்சத்து 36 ஆயிரத்து 463 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள். இதனால் அமீரகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 15 ஆயிரத்து 129 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.