வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 6,028 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி!

TM 20201004222716147413 3
TM 20201004222716147413 3

உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 33-வது இடத்தில் உள்ளது.

வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 இலட்சத்தை நெருங்குகிறது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 6,028 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6,97,985 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 69 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 891 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து 5.85 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்தது.