டெல்லி வைத்தியசாலையில் ஒட்சிசன் இல்லாமையால் 20 பேர் பலி

thumb 263
thumb 263

இந்திய தலைநகர் டெல்லி கொரோனாவின் பிடியில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அங்குள்ள பல வைத்தியசாலைகளில் தீவிரமான பாதிப்பில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஒக்சிசன் கிடைப்பதில் நெருக்கடி தொடர்கிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் வைத்தியசாலையில் ஒட்சிசன் பற்றாக்குறையால் நேற்று வெள்ளிக்கழமை இரவு 20 பேர் உயிரிழந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒட்சிசன் கையிருப்பு இன்னும் அரை மணி நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்பதால் மேலும் 200- பேரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் கூறியிருக்கிறது.

ஒட்சிசன் பற்றாக்குறையால் நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள் என டெல்லி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லி ராஜேந்திரா நகரில் அமைந்துள்ள சர் கங்காராம் தனியார் வைத்தியசாலையில் ஒட்சிசன் நெருக்கடியால், மிக மோசமான நிலையில் இருந்து வந்த 25 கொரோனா நோயாளிகள் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்திருக்கிறார்கள்.

இவர்களின் இறப்புக்கு காரணம் குறைந்த அழுத்த ஒட்சிசன்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.