டெல்லியில் ஒரே நாளில் 24 ஆயிரம் பேருக்கு கொரோனா!

539049
539049

டெல்லியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவலை தடுக்க, டெல்லில் ஒரு வாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை, 5:00 மணியுடன் முடிவுக்கு வருவதாக இருந்த ஊரடங்கு, மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, மே மாதம் 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி வைத்தியசாலைகளுக்கான ஒட்சிசன் விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

டெல்லிக்கு தேவையான ஒட்சிசன், டேங்கர்களை அளித்து உதவும்படி, முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.