முகக்கவசத்தை அணியத் தவறிய தாய்லாந்து பிரதமருக்கு 190 அமெரிக்க டொலர் அபராதம்!

114279632 gettyimages 1132893428
114279632 gettyimages 1132893428

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டாயமாக்கப்பட்டுள்ள முகக்கவசத்தை அணியத் தவறியதற்கு தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவிற்கு (Prayuth Chan-ocha) 190 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கின் ஆளுநர் அஸ்வின் குவான்முவாங் (Aswin Kwanmuang) இதனை தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாத நிலையில், பிரதமரின் புகைப்படம் சமூக வலைத் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.