இந்தியாவில் கொரோனா பெருந் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் 3,285 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய அந்நாட்டில் கொரோனா தொற்றுக்கு இதுவரையில் 201,165 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் புதிதாக மேலும் 362,902 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 17,988,637 பேர் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2,979,768 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதிக தொற்று பாதிப்பில் 2-ம் இடத்தில் உள்ள பிரேசிலில் 76,085 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 3,120 பேர் உயிரிழந்துள்ளனர்.