ஆராய்ச்சியாளர்களை அசரவைத்த அந்தாட்டிக்காவின் ஆழமான பகுதி

625.0.560.350.160.300.053.800.668.160.90 2
625.0.560.350.160.300.053.800.668.160.90 2

பனிக்கட்டிகளால் நிறைந்த பகுதியே அந்தாட்டிக்காவாகும்.
முதன் முறையாக இதன் மிகவும் ஆழமான பகுதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பகுதியானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3.5 கிலோ மீற்றர்கள் ஆழத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழுவே இந்த ஆழமான பகுதியை கண்டுபிடித்துள்ளார்கள்.

நுண் அலைகளை பனிக்கட்டிகளுக்கு ஊடாக செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆறு வருடங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 413 மீற்றர்கள் ஆழமே அந்தாட்டிக்கா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.