2ம் உலகப் போர் வெடிகுண்டு கண்டெடுப்பு

itali 2
itali 2

இத்தாலியின் தெற்கு பகுதியில் 1941ம் ஆண்டு இத்தாலி மீது இங்கிலாந்தினால் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு ரிமோட் மூலம் அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அப்பிரதேசத்தினை சுற்றியுள்ள 54000 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களிற்கு வெளியேற்றப்பட்டனர்.

அத்துடன் அங்குள்ள விமான நிலையம், புகையிரத நிலையம், மருத்துவ நிலையம், சிறைச்சாலை என்பவற்றின் பாதுகாப்புக்க பலப்படுத்தப்பட்டு குறித்த வெடிகுண்டை படையினர் செயலிழக்க செய்துள்ளனர்.