வடகொரியாவில் கொரோனா இல்லை என உறுதி

201708231307130141 NKorea Kim orders production of more rocket engines warhead SECVPF
201708231307130141 NKorea Kim orders production of more rocket engines warhead SECVPF

எமது நாட்டில் கொரோனா தொற்று இல்லை என்று வடகொரியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் கொவிட்-19 தொற்று சந்தேகத்தில் 25,986 பேரை பரிசோதித்ததாகவும், அதில் எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் வடகொரியா உலக சுகாதார ஸ்தாபனத்திடம் கூறியுள்ளது.

வட கொரியாவின் சோதனை புள்ளிவிவரங்களில் ஏப்ரல் 23-29 காலங்களில் பரிசோதிக்கப்பட்ட 751 பேர் அடங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு வார கண்காணிப்பு அறிக்கையில் கூறியது.

அவர்களில் 139 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் அல்லது கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் கொவிட்-19 தொடர்பான வடகொரியாவின் கருத்தில் சந்தேகம் இருப்பதாக வல்லுநகர்கள் கூறியுள்ளனர்.

வட கொரியா கொவிட்-19 க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளைத் தடைசெய்துள்ளது, இராஜதந்திரிகளை வெளியேற்றியது மற்றும் எல்லை தாண்டிய போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை கடுமையாக தடைசெய்தது.

இந்த ஆண்டு தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதை வடகொரியா நிறுத்தியுள்ளது, ஆனால் கடந்த ஆண்டில் கொவிட்-19 தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்திய பல்லாயிரக்கணக்கானவர்களை தனிமைப்படுத்தியதாகக் கூறியது.