இந்தியாவில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

thunder rain
thunder rain

வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, புதுக்கோட்டை தென்காசி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

இதனிடையே எதிர்வரும் 14 ஆம் திகதி தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் மாலைத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய தெற்கு அரபிக் கடல் மற்றும் மாலைத்தீவு பகுதிக்கு 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது