இஸ்ரேல், காசாவில் வான்வழித் தாக்குதல்களில் 35 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

isrel2
isrel2

இஸ்ரேலிய ஜெட் விமானங்களும் பாலஸ்தீனிய போராளிகளும் புதன்கிழமை அதிகாலை புதிய வான்வழித் தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை ஆரம்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டதில் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை காசாவில் 38 – 35 ஆகவும், இஸ்ரேலில் மூன்று ஆகவும் உயர்வடைந்துள்ளது.

இஸ்ரேல் காசாவில் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், பாலஸ்தீனிய போராளிக்குழுக்கள் டெல் அவிவ், பீர்ஷெபா மற்றும் பிற மத்திய இஸ்ரேலிய நகரங்களில் பல ரொக்கெட்டுகளை வீசியுள்ளன.

முற்றுகையிடப்பட்ட காசா பகுதிக்கு இஸ்ரேல் இராணுவம் புதன்கிழமை அதிகாலை குண்டுவீச்சு நடத்தியது. இது 2014 இல் குண்டுவெடிப்புக்குப் பின்னர் காசாவில் அரங்கேறிய மிகவும் தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் ஆகும்.

ஹமாஸ், கடலோரப் பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட்டுகளை ஏவிய பின்னர் திங்கட்கிழமை பிற்பகுதியில் இருந்து இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலினால் குறைந்தது 10 சிறுவர்கள் உட்பட 35 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

குறைந்தது மூன்று இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்குப் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திலிருந்து இஸ்ரேல் தனது பாதுகாப்புப் படையினரை நிறுத்துமாறு கோரி காசாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் இறுதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன

புனித ரமழான் மாதத்தின் இறுதி நாட்களில் மசூதிக்குள் பாலஸ்தீனிய வழிபாட்டாளர்கள் மீது இறப்பர் தோட்டாக்கள், கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை இஸ்ரேலிய காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் தாக்கியுள்ளனர்.

சமீபத்திய நாட்களில் ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 700 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.