கொரோனாவை கட்டுப்படுத்த கோரி மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்!

opposition 660 052919070030
opposition 660 052919070030

இந்தியாவில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு சில கோரிக்கைகளை பரிந்துரைத்து 12 எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

இந்தியாவில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் இலவச தடுப்பூசிகளை விநியோகித்தல் மற்றும் விவசாய சட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்துள்ளன.

இதற்கு முன்னர் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்தமை காரணமாகவே இந்தியாவில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததாக அந்த நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

இந்தியாவில் தயாரிக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதோடு, அனைத்து மூலங்களில் இருந்தும் தடுப்பூசிகள் கொள்வனவு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு 35,000 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தமது கடிதத்தில் கோரியுள்ளது.