புதைக்கப்பட்டிருந்த சடலங்களின் ஆடைகளை திருடி விற்ற 7 பேர் கைது

kaithu
kaithu

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த உடல்களை தோண்டி எடுத்து அவற்றுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆடைகளை திருடி விற்ற சந்தேக நபர்கள் 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் பரவியது.

இதை பற்றி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த குழுவினர் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இறந்த சடலங்களை புதைத்த பின்னர் இவர்கள் அவ்விடத்திற்கு சென்று அவற்றைத் தோண்டி எடுத்து அவற்றுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் ஆடைகளை திருடும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு திருடும் ஆடைகளை சுத்தம் செய்து புதிய ஆடைகள் போல் மாற்றி புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களின் முத்திரைகளை பதித்து விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து 520 போர்வைகள், 127 குர்தாக்கள், 52 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.