சீன தடுப்பூசி பாதுகாப்பானது என உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்!

202105130532472213 Tamil News Tamil News Chinas Sinopharm COVID19 vaccine safe SECVPF
202105130532472213 Tamil News Tamil News Chinas Sinopharm COVID19 vaccine safe SECVPF

சீனாவில் கொரோனாவுக்கு எதிராக சைனோபார்ம் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

இது குறித்து ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவி தலைமை இயக்குனர் மரிய ஏஞ்சலா சிமாவோ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “கடுமையான கொரோனாவுக்கு எதிரான செயல் திறன் மிக்கது சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி என்பதற்கு எங்களிடம் ஆதரவு உள்ளது. இந்த தடுப்பூசி உலகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 கோடியே 20 இலட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பாதுகாப்பானது. செயல்திறன் மிக்கது” என குறிப்பிட்டார்.

கடந்த வாரம் இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதியை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வழங்கியது நினைவுகூரத்தக்கது.