கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவில் 326,098 பேருக்கு தொற்று

coronabusiness 1588833381344
coronabusiness 1588833381344

இந்தியாவில் நேற்றைய நாளில் 326,098 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதையடுத்து, தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 24,372,907 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய நாளில், 3,890 மரணங்கள் பதிவான நிலையில், மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 266,207 ஆக உயர்வடைந்துள்ளது.

2,432,898 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,673,802 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது