துருக்கியின் மிக பழமையான மசூதி இடமாற்றம்!!

turuki
turuki

துருக்கியின் தெற்கு பகுதியில் பழமையான நகரங்களில் ஒன்றான ஹசன்கீப் பகுதியில் உள்ள எரி ரிஸ்க் என்ற மசூதி பெயர்த்து எடுக்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஹசன்கீப் நகரில் உள்ள 609 ஆண்டுகள் பழமையான எரி ரிஸ்க் என்ற மசூதி பெயர்த்து எடுக்கப்பட்டு வாகனம் மூலம் 3½ கி.மீ தொலைவில் உள்ள ஹசன்கீப் கலாசார பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

1,700 டன் எடை கொண்ட எரி ரிஸ்க் மசூதியின் மேல் பகுதி தனியாகவும், கீழ் பகுதி தனியாகவும் பிரிக்கப்பட்டு 2 தனித்தனி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது.

ஹசன்கீப் நகரில் உள்ள டைக்ரிஸ் ஆற்றுக்கு அருகே லிசு என்ற பிரமாண்ட அணை கட்டப்பட்டு அதன் பணிகள் நிறைவுற்றதும் டைக்ரிஸ் ஆற்றில் இருந்து லிசு அணைக்கு தண்ணீர் திருப்பிவிடப்படும்.

இதன் காரணமாக அங்குள்ள பழமையான கட்டடிடங்கள் நீரிழ் மூழ்கி அழிவுறும் நிலை காணப்படுகின்றமையினால் அங்கு உள்ள வரலாற்று சின்னங்கள் அனைத்தும் படிப்படியாக அருகில் உள்ள பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றது.