இந்தியாவில் முன்களப் பணியாளர்களில் 270 வைத்தியர்கள் பலி!

download 69
download 69

இந்தியாவில், கொவிட்-19 இரண்டாம் அலையின்போது பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களில், இதுவரை 270 வைத்தியர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மருத்துவ சங்கத்தை மேற்கோள்காட்டி, அந்த நாட்டு ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக, பீகார் மாநிலத்தில் 78 வைத்தியர்கள் மரணித்தனர்.

உத்தர பிரதேசத்தில் 37 பேரும், டெல்லியில் 29 பேரும், ஆந்திராவில் 22 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொவிட்-19 முதலாவது அலையில், இந்தியாவில், 748 வைத்தியர்கள் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.