உலகளாவிய ரீதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 16.58 கோடியை கடந்தது

covid 19 latest news coronavirus red background concept 1017 24304 1
covid 19 latest news coronavirus red background concept 1017 24304 1

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16.58 கோடியை கடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோன்று கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34.44 இலட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பமான கொரோனா வைரஸ் தொற்று பெரும்பாலான உலக நாடுகளில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று பரவல், ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்துள்ளபோதிலும் இதன் வீரியம் இதுவரையிலும் குறையவில்லை. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 16.58 கோடியைக் கடந்துள்ளது.

அதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 14.65 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1.58 கோடிக்கும் அதிகமானோர் இன்றுவரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் 99000 க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.