ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,232 பேருக்கு கொரோனா!

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,74,908 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்கு 396 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 17 ஆயிரத்து 361 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 45.91 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2.65 இலட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.