ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,709 பேருக்கு கொரோனா!

rt PCR items laboratory hero 1
rt PCR items laboratory hero 1

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,92,554 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்கு 386 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 18 ஆயிரத்து 125 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 46.10 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2.63 இலட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.