ரஷ்யாவில் மேலும் 9,289 பேருக்கு கொரோனா!

wp5867879
wp5867879

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 50,53,748 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மேலும் 401 பேர் உயிரிழந்ததால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 20 ஆயிரத்து 807 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றில் இருந்து 46,70,484 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது 2,62,457 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.