அமெரிக்காவை எதிர்க்க தயாராக வேண்டும் – கிம் ஜோங் உன்

1 kim
1 kim

ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கும், எதிர்ப்புக்கும் தமது நாடு தயாராக வேண்டும் என வடகொரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடகொரிய மத்திய செய்திச் சேவையை மேற்கோள்காட்டி, வெளிநாட்டு ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனுடனான உறவுகளுக்கான தமது மூலோபாயத்தையும், புதிய அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைப் போக்கையும் கிம் ஜொங் உன் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.