அமெரிக்காவில் அதிகரித்துவரும் டெல்டா வைரஸ் தொற்று!

America corona 1
America corona 1

அமெரிக்காவில் தற்போது கொவிட்-19 வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து டெல்டா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த ஏழு நாட்களாக அமெரிக்காவில் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.

எனினும் அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களாக 35.6 சதவீத மக்கள் டெல்டா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி முதல் நாளாந்தம் 11,500 அமெரிக்கர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதாக அமெரிக்க நோய்த் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது.

10 இலட்சம் பேரில் சராசரியாக 3.5 சதவீதமானோர் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது டெல்டா வைரஸ், ஆதிக்கம் செலுத்தி வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.