இந்தியாவின் கொவெக்சின் தடுப்பூசி டெல்டா,அல்பா திரிபுகளுக்கு எதிராக செயலாற்ற கூடியது!

01 13
01 13

இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரசின் டெல்டா திரிபு மற்றும் பிரித்தானியாவின் அடையாளம் காணப்பட்ட அல்பா திரிபு என்பவற்றுக்கு எதிராக, இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற கொவெக்சின் தடுப்பூசி வினைத்திறனாக செயலாற்றக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி மருத்துவ ஆய்வு நிறுவகமான தேசிய சுகாதார நிறுவகம், கொவெக்ஸின் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் அல்பா மற்றும் டெல்டா ஆகிய இரண்டு திரிபுகளுக்கு எதிராகவும், இந்த தடுப்பூசி வினைத்திறனான எதிர்ப்புடலை உருவாக்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்ட ஆய்வு இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக்கப்படவுள்ளது.

எனினும், அந்த அறிக்கையின் உள்ளகத் தகவல்களின் படி, இந்த தடுப்பூசியானது கொவிட்19 நோயிலிருந்து 78 சதவீத பாதுகாப்பளிப்பதாக அறியமுடிகிறது.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆய்வு பேரவையுடன் இணைந்து கொவெக்ஸின் தடுப்பூசியைத் தயாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.