அமெரிக்காவும் தாய்வானும் மீள வர்த்தக பேச்சுவார்த்தை

np file 47218
np file 47218

அமெரிக்காவும், தாய்வானும் 5 ஆண்டுகளின் பின்னர் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பித்துள்ளன.

சீனாவின் ஆட்சேபனைகளுக்கு மத்தியில், இன்றைய தினம் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு உடன்படிக்கையை, இரு தரப்பும் மீள புதுப்பித்ததை அடுத்து, இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.