மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கிறது ‘எவர் கிவன்’ சரக்கு கப்பல்

IMG 20210328 213126
IMG 20210328 213126

மார்ச் மாதத்தில் சூயஸ் கால்வாயுடனான வர்த்தக போக்குவரத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தியமைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள எவர் கிவன் சரக்கு கப்பல் அதன் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

கொள்கலன் கப்பல் உரிமையாளர் மற்றும் காப்பீட்டாளர்கள் கால்வாய் அதிகாரத்துடன் இழப்பீட்டுத் தொகை தீர்வை எட்டிய பின்னர் கப்பல் புதன்கிழமை தனது பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளது.

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான, எவர் கிவன் ஆறு நாட்களாக கால்வாயின் ஒற்றை வழித்தடத்தில் குறுக்காக சிக்கி, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதுடன், உலகளாவிய வர்த்தகத்தையும் சீர்குலைத்தது.

இதற்காக சூயஸ் கால்வாய் ஆணையம் மீட்பு நடவடிக்கை மற்றும் பிற இழப்புகளுக்காக 900 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்பீட்டை கோரியது. பின்னர் இது 550 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்தபோது கப்பல் நீதிமன்ற உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டது.

கப்பலும் அதன் இந்தியக் குழு பணியாளர்களும் மூன்று மாதங்களுக்கும் மேலாக கிரேட் பிட்டர் ஏரியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இரு தரப்பினர்களுக்கிடைலும் ஒரு வெளிப்படுத்தப்படாத தீர்வு எட்டப்பட்டுள்ள நிலையல், புதன்கிழமை கப்பல் விடுவிக்கப்படும் என்று சூயஸ் கால்வாய் ஆணையம் அறிவித்தது.

சுமார் 18,300 கொள்கலன் சுமந்துள்ள கப்பல் புறப்படுவதைக் குறிக்கும் வகையில் கால்வாயில் ஒரு விழா நடத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.