இரண்டு கொவிட் திரிபுகளுடன் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்!

Corona Death 2
Corona Death 2

பெல்ஜியத்தில் இரண்டு கொவிட் திரிபுகளுடன்அடையாளம் காணப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்நாட்டை சேர்ந்த 90 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணுக்கு பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட அல்பா கொவிட் வைரஸூம், தென் ஆபிரிக்காவில் பரவி வரும் பீட்டா கொரோனா வைரஸூம் தொற்றியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அத்துடன், இந்த பெண் சுகாதார வழிமுறைகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், கொவிட் தடுப்பூசியும் இந்த பெண் பெற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கொவிட் தொற்றுறுதியானதாகவும், இதுவே அவரது மரணத்துக்கு காரணமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.