பிரித்தானிய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கொவிட் தொற்று!

ctp video meghan markle meghan markle news tignanello sajid javid sajid javid news dominic cummings carrie symonds carri 3121861
ctp video meghan markle meghan markle news tignanello sajid javid sajid javid news dominic cummings carrie symonds carri 3121861

பிரித்தானிய சுகாதார அமைச்சின் செயலாளர் சஜிட் ஜாவிட்டுக்கு (Sajid Javid) கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் இரண்டு கொவிட்-19 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் தற்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக சிறியளவிலான நோய் அறிகுறிகளே அவருக்கு தென்படுவதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

தொற்று உறுதியானதையடுத்து  அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் நாளாந்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு 54,674 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.