இந்தியாவின் 300 முக்கியஸ்தர்களின் கைபேசிகள் கண்காணிப்பு!

vikatan 2020 06 15da995b ead7 458a b27f b3a069a8e9e0 p29a
vikatan 2020 06 15da995b ead7 458a b27f b3a069a8e9e0 p29a

இஸ்ரேலினால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் பேகஸஸ் ஒற்று மென்பொருள் ஊடாக இந்திய அதிகாரிகளால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கைப்பேசியும் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

உலக நாடுகளின் அரசாங்கங்களுக்காக இந்த ஒற்று மென்பொருள் தயாரிக்கப்படுகிறது.

இதனைக் கொண்டு இந்தியாவின் 300 முக்கியஸ்தர்களின் கைபேசிகள் கண்காணிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

அவர்களில் ராகுல் காந்தி மற்றும் அவரது தேர்தல் திட்டமிடல் அதிகாரி பிரசாந்த் கிஷோர் ஆகியோரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராகுல் காந்தி பயன்படுத்தும் 2 கைப்பேசிகள் இவ்வாறு கண்காணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, இவ்வாறான இரகசிய கண்காணிப்பு தொடர்பில் முறையான விதிமுறைகள் அமுலாக்கப்பட வேண்டும் என்று, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலெட் அறிக்கை ஒன்றை விடுத்து வலியுறுத்தியுள்ளார்.