உலகளாவிய ரீதியில் 75 சதவீதமானோரிடையே டெல்டா வைரஸ் தொற்று!

76852287
76852287

உலகம் முழுவதும் கொவிட் தொற்று உறுதியானவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வைரஸ் திரிபினை சேர்ந்தவை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வந்தன.

அவற்றில் டெல்டா வைரஸ் திரிபு என உறுதி செய்யப்பட்ட கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 75 சதவீதத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் திரிபானது, ஏனைய கொவிட் வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொவிட் தடுப்பூசி திட்டங்கள் விரிவுப்படுத்தப்பட்டு இருப்பினும், சில நாடுகளில் நாளாந்தம் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.