லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

download 1 8
download 1 8

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

லெபனானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் முன்னதாக தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய விமானப் படை அறிவித்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஏவுகணைகள் ஏவப்பட்ட தளங்களை இலக்கு வைத்து பதில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அந்த நாட்டு ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர், ஒரு தகவலை அனுப்பும் நோக்கில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனை விடவும் மேலும் பதில் தாக்குதல்கள் நடத்த முடியும் எனவும் எச்சரித்துள்ளார்.

லெபனானில் உள்ள பாலஸ்தீன குழுக்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

லெபனானில் உள்ள சிறிய பாலஸ்தீன குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது துப்பாக்கி பிரயோகத்தினை நடத்தியதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் 2014 ஆம் ஆண்டிலிருந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை இதுவே முதற்தடவை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.