தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை 750x375 1
தமிழக சட்டப்பேரவை 750x375 1

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (19) கூடவுள்ளது.

இதன்போது திருத்திய நிதிநிலை அறிக்கைகள் மீது நிதியமைச்சரும், வேளாண் அமைச்சரும் பதிலளிக்கவுள்ளனர்.

குறித்த அறிக்கைகள் கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது வாத பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில், இதன்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்களான பழனிவேல் தியாகராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளிக்கவுள்ளனர்.

அதேநேரம் எதிர்வரும் 23 ஆம் திகதிமுதல் துறைரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது.