அமெரிக்க படையினர் ஓகஸ்ட் 31 ற்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றம்!

782 original 1
782 original 1

ஆப்கானிஸ்தானில் இருந்து தமது படையினர் உள்ளிட்டோரை, எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் வெளியேற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்தப் பணிகளை தாங்கள் நிறைவு செய்கின்றமை நல்லதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியேற்றத்திற்கான கால அவகாசத்தை தாங்கள் நீடிக்கப்போவதில்லை என தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

பெருமளவான அமெரிக்க படையினர் வெளியேறியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து தமது நாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை பாதிக்கப்படவில்லை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர், கடந்த 9 நாட்களில் காபூலில் இருந்து சுமார் 70700 பேர் விமானம் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.