60% ஆப்கான் சிறுவர்கள் இருப்பிடத்தை விட்டு நீங்கும் சூழல் உள்ளதாக ஐ.நா கவலை!

220px 100919 A 0667M 110
220px 100919 A 0667M 110

இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள 60 சதவீதமான சிறுவர்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் யுத்தம் தீவரமடைந்ததன் காரணமாக கடந்த மே மாத முதற்பகுதியில் இருந்து இதுவரையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதற்கமைய இந்த வருடத்தில் ஆரம்பம் முதல் 5 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் சிறுவர்களும் தங்களது சொந்த இருப்பிடங்களில் இருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, அதிகளவானோர் இடம்பெயர்வதன் காரணமாக அவர்கள் ஏதிலிகளாக செல்லும் நாடுகளிலும் பல அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டிய அச்சம் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.