நியூஸிலாந்தில் 6 மாதங்களின் பின்னர் முதல் கொவிட் மரணம்!

death
death

நியூஸிலாந்தில் கடந்த 6 மாதங்களின் பின்னர் முதலாவது கொவிட்-19 மரணம் பதிவாகியுள்ளது.

90 வயதான பெண் ஒருவரே நேற்றிரவு உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன்படி, நியூஸிலாந்தில் கொவிட்-19 நோயால் மரணித்த 27 ஆவது நபராக அவர் பதிவாகியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி கொவிட் மரணம் இறுதியாக பதிவானதை அடுத்து, ஆறு மாதங்களின் பின்னர் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.

உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண், ஒக்லாண்டில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற நிலையில் உயிரிழந்தார்.

இதேவேளை, டெல்டா திரிபு கட்டுப்பாட்டுக்குள்வரும் அறிகுறி தென்படுவதாக நியூஸிலாந்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.