ஜேர்மனில் புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் கடுமையான போட்டி!

germany 22022021 400 1
germany 22022021 400 1

ஜேர்மனின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் கடுமையான போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மனியை 16 வருட காலமாக நிர்வகித்த பிரபல சான்சலரான அஞ்செலா மேக்கெல்லின் இடத்திற்கு தெரிவாவதில் கடுமையான போட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பின்னரான கணிப்புகளின் அடிப்படையில், மத்திய இடதுசாரி சமூக ஜனநாயகவாத கட்சி சற்று முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் வேட்பாளர் ஓலாஃப் ஷோட்ஸ், அடுத்த அரசாங்கத்தை உருவாக்கி நாட்டை வழிநடத்தத் தாம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அஞ்செலா மேக்கெல்லின் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் சிறிதளவு வாக்கு வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

எனவே ஆட்சியமைப்பதற்குப் பெரும்பான்மையாக மூன்று கட்சிகளின் ஆதரவு தேவைப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை நீளமானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஜேர்மனியின் அடுத்த தலைவர் யார்? என்பதை அறிந்துகொள்ள சில வாரங்கள் வரை ஆகலாம் என்று நம்பப்படுகிறது.