கிரேக்க தீவான கிரீட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

FARW 6WEAc4YCr
FARW 6WEAc4YCr

கிரேக்க தீவான கிரீட்டின் தலைநகரான ஹெராக்லியோனுக்கு தென்கிழக்கே சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் திங்கட்கிழமை அதிகாலை 6.5 ரிச்டெர் அளவுகளில் பதிவுசெய்யப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கிரேக்க அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை வெளியிடவில்லை. இப் பகுதியின் மக்கள் தொகை 480,000 க்கும் அதிகமாகும்.

மத்திய தரைக்கடல் கடல் ஆபிரிக்க மற்றும் யூரேசிய தட்டுகளுக்கு இடையே உள்ள ஒரு எல்லை என்பதால் கிரீஸ் நில அதிர்வு ரீதியாக செயல்படும் பகுதியில் உள்ளது.