உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊழியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு!

image 5c4488caf2
image 5c4488caf2

கொங்கோ குடியரசில் இபோலா தொற்றைக் கட்டுப்படுத்தும்போது பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நிவாரணப் பணியாளர்களில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊழியர்களும் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2018 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் 83 பேருக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குற்றம் சாட்டப்பட்ட நபர்களுள் உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் 21 பேர் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்களில் நால்வரின் உடன்படிக்கைகளை ரத்து செய்ய உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான 29 பெண்கள் கர்ப்பமடைந்துள்ளதாகவும், அவர்களில் சிலர் கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளனர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறிருப்பினும், பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு ஒது்துழைப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், குற்றத்தை புரிந்தவர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.