இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

coronavirus banner
coronavirus banner

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 21 ஆயிரத்து 684 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 31 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 2 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 183 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 49 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.