சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளின் எண்ணிக்கையை குறைக்க பிரித்தானியா தீர்மானம்

af96233a c547146c uk 850x460 acf cropped
af96233a c547146c uk 850x460 acf cropped

கொவிட்-19 பயண சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை, 54 இலிருந்து ஏழாக குறைக்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலாகும் என பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் க்ராண்ட் ஷாப்ஸ் (Grant Shapps ) தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா, பிரேஸில், மெக்ஸிகோ உள்ளிட்ட 47 நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

பனாமா, கொலம்பியா, வெனிசுவெலா, பெரு, ஈக்குவடோர், ஹெய்ட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு முதலான ஏழு நாடுகள் பிரித்தானியாவின் கொவிட்-19 பயண சிவப்பு பட்டியலில் தொடர்ந்தும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.