இந்திய மத்திய அமைச்சர் அஜே மிஷ்ராவின் மகன் கைது

kaithu
kaithu

6 நாட்களுக்கு முன்னர், 8 உயிர்களைக் காவுகொண்ட சம்பவத்துடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் இந்திய மத்திய அமைச்சர் அஜே மிஷ்ராவின் மகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, அவர்கள்மீது அமைச்சரின் மகிழுந்து மோதியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தினால் சீற்றம் கொண்ட விவசாயிகள் மகிழூந்தில் இருந்த சாரதி உட்பட மூவரை அடித்துக் கொன்றுள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவத்தின்போது ஊடகவியலாளர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

இந்த மோதல் சம்பவத்தின் பின்னணியில் பிரதி உள்துறை அமைச்சர் செயல்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

எனினும் குறித்த குற்றச்சாட்டினை இந்திய மத்திய அமைச்சர் அஜே மிஷ்ரா அமைச்சர் மறுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று கைது செய்யப்பட்ட அவரது மகனை நீதிமன்ற காவலில் 14 நாட்களுக்கு வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கைதி செய்யப்பட்ட புதல்வர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனக் காவல்துறையினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.