10 நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாட்டை நீக்கியது தாய்லாந்து

shutterstockRF 793581025
shutterstockRF 793581025

குறைந்த பாதிப்புக்களை கொண்ட 10 நாடுகளை சேர்ந்த இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தாய்லாந்து தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து அந்த நாட்டு மக்களுக்குக் கருத்துரைத்த தாய்லாந்து பிரதமர் பிரயுத் (ச்)சன் ஒச்சா (Prayuth Chan-ocha) நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புதவதற்கு இது உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த ஆபத்தில் காணப்படும் 10 நாடுகளில் சீனா, ஜேர்மன், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்குவதாக தாய்லாந்து பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நாடுகளிலிருந்து வருகின்ற பயணிகள் கொவிட்-19 பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்குத் தாய்லாந்தில் மற்றுமொரு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

குறித்த பரிசோதனை அறிக்கைகளின் முடிவுகளுக்கு அமைய நாட்டின் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தாய்லாந்து அறிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பல பொதுஇடங்களை மீளத் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த தாய்லாந்து பிரதமர், இதனையடுத்து பல நாட்டு மக்களுக்கும் தாய்லாந்துக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.