தமது தரைவழி எல்லைகளை மீள திறக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

download 19
download 19

கனடா மற்றும் மெக்ஸிகோவுடனான தமது தரைவழி எல்லைகளை, நவம்பர் மாத ஆரம்பத்தில் மீளத் திறக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதற்கமைய, பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உள்ளான, அத்தியாவசியமற்ற பயணிகளுக்காக இவ்வாறு எல்லைகள் திறக்கப்பட உள்ளன.

அத்துடன், எல்லைகள் திறக்கப்படும் திகதியை, நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.