பிரான்ஸில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய ஏதிலிகள் 3 பேர் தொடருந்தில் சிக்கி பலி!

1200px Twin track of train rails in a wooded area

பிரான்ஸில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய ஏதிலிகள் 3 பேர், தொடருந்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவரின் கால் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸின், தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பியாரிட்ஸ் நகர், பிரான்ஸ்வரும் அகதிகளுக்கான பிரதான போக்குவரத்து பாதையாக உள்ளது.

பல்வேறு நாடுகளில் இருந்துவரும் அகதிகள் இந்த நகரில் இருந்து பிரான்ஸின் பிற இடங்களுக்கு செல்கின்றனர். அவ்வாறே கடந்த 11 ஆம் திகதி இரவு பியாரிட்ஸ் நகருக்கு வந்த ஏதிலிகள் சிலர் அங்குள்ள தொடருந்து தண்டவாளத்தில் படுத்துறங்கியுள்ளனர். அதன்போது, இந்தத் தண்டவாளத்தில் வந்த தொடருந்தில் சிக்குண்டு குறித்த ஏதிலிகள் பலியாகியுள்ளனர். இந்த கோரச் சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.