செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா

pexels photo 301599
pexels photo 301599

செயற்கை சூரியன் அடுத்த ஆண்டு தயாராகிவிடும் என சீனா தெரிவிக்கின்றது.

சீனா நாட்டை சேர்ந்த நேஷனல் நியூக்ளியர் கோப்ரேசனில் பணியாற்றி வரும் அறிவியல் அறிஞர்கள் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் செயற்கை சூரியனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த பணி தற்போது முடிவடையும் நிலையில் இரு ஹைட்ரஜன் அணுக்களை இணைப்பதன் மூலம் மிகப் பெரிய செயற்கை சூரியன் 2020-ஆம் ஆண்டு ஒளிரும் என தெரிவித்துள்ளனர்.

பொதுவாக சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் பாகை செல்சியஸாக இருக்கும். ஆனால் செயற்கை சூரியனின் வெப்பநிலையோ 100 மில்லியன் பாகை செல்சியசில் இருக்கும். அதாவது உண்மையான சூரியனை விட 6 மடங்கு அதிகம்.

இந்த செயற்கைசூரியனுக்கு டோகோமாக் என பெயரிடப்பட்டுள்ளது.