தமிழகத்தில் இதுவரை கொரோனா 3ஆவது அலைக்கான அறிகுறிகள் இல்லை

radhakrishnan 750x375 1
radhakrishnan 750x375 1

தமிழகத்தில் இதுவரை கொரோனா 3ஆவது அலைக்கான அறிகுறிகள் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘தமிழகத்தில் நடைபெறும் 6ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 1.40 கோடி முதியவர்களில் 47 இலட்சம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

2-வது தவணை தடுப்பூசியை 22 இலட்சம் முதியவர்கள் மட்டுமே போட்டுள்ளனர். இறப்பு விகிதம் அதிகமுள்ளோர் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பது சரியல்ல.

தமிழகத்தில் இதுவரை கொரோனா 3ஆவது அலைக்கான அறிகுறிகள் இல்லை. அறிகுறிகள் இல்லை என்றாலும் 3ஆவது அலை வராது என்று கூற இயலாது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சிலவற்றில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. மழை காலங்களில் பரவும் நோய்களில் இருந்தும் மக்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்’ என மேலும் தெரிவித்தார்.