சீன இரசாயன ஆலை ஒன்றில் வெடிப்பு ; 4 பேர் உயிரிழப்பு

china 700x375 1
china 700x375 1

சீனாவின் வடக்கே இன்னர் மங்கோலியா சுயாட்சி பகுதியில் உள்ள இரசாயன ஆலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து நிறுவனத்தின் பிரதிநிதியை உள்ளூர் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய பிராந்திய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது.